Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS KKR : ஆர்சிபி-யின் கனவை தகர்த்தது கொல்கத்தா ….! குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது ….!!!

கொல்கத்தா அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வியடைந்த பெங்களூர் அணி தொடரில் இருந்து வெளியேறியது .

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த  எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்தின . இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி பெங்களூர் அணி முதலில்  களமிறங்கியது.இதில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 21 ரன்னும் ,கேப்டன் விராட் கோலி 39 ரன்னும் எடுத்தனர்.இதன்பிறகு களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேறினர் . இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவரில்  7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் குவித்தது .

இதில் கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரேன் 4 விக்கெட்டும் , பெர்குசன் 2 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினர். இதன்பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணி 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது.இதில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் – வெங்கடேஷ்  அய்யர் ஜோடி களமிறங்கினர் .இதில் சுப்மன் கில் 29 ரன்னில் ஆட்டமிழக்க ,வெங்கடேஷ் அய்யர் 26ரன்னில் வெளியேறினார். இறுதியாக கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குவாலிபயர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Categories

Tech |