Categories
மாநில செய்திகள்

அனைத்து வழக்குகளும் ரத்து…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் அறவழியில் நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் கடைகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மேல் தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப் படுவதாக முதல்வர் முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவற்றிற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் சிஏஏ சட்டம், வேளாண் சட்ட திருத்த மசோதா, உள்ளிட்டவர்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் கூடங்குளம் அணுமின் நிலையம், எட்டுவழிச்சாலை, அணுமின்நிலையம், நியூட்ரினோ திட்டம், போன்றவற்றுக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசு தொடுத்திருந்த 5570 வழக்குகள் அரசு ரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு தொடரப்பட்ட வழக்குகளில் விசாரணையில் உள்ள 341 வழக்குகள், நீதிமன்ற விசாரணைகளில் நிலுவையில் உள்ள 105 வழக்குகள், என மொத்தம் 146 வழக்குகள் வாபஸ் புறப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில், டாஸ்மாக் கடைகள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் விசாரணையில் உள்ள 339 வழக்குகள் மற்றும் நீதிமன்ற நிலுவையிலுள்ள வழக்குகள் 83 ஆயிரத்து 472 வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன.

இதனால் மொத்தமாக 28 வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் நீதிமன்றங்களில் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகள் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 370 ஒன்றியத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் சட்ட விதிகளின்படி வாபஸ் பெறப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |