Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏமாந்து போன நரிக்குறவர்…. தப்பி ஓடிய 2 நபர்கள்…. வனத்துறையினர் வலைவீச்சு….!!

வனத்துறை அதிகாரி போல் ஏமாற்றிய இரண்டு நபர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில் திட்டப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வெடிமருந்து நிரப்பப்பட்ட நாட்டு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது வழியில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள் திட்டப்பிள்ளையை வழிமறித்து தாங்கள் வனத்துறை அதிகாரிகள் எனவும் அவரிடம் இருக்கும் துப்பாக்கி உரிமத்தை காண்பிக்குமாறு கூறியுள்ளனர்.

இதனை நம்பிய திட்டப்பிள்ளை தன்னிடம் இருந்த துப்பாக்கியின் உரிமத்துக்கான ஆவணத்தை எடுக்க முயற்சி செய்த போது அவர்கள் 2 பேரும் நாட்டு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒருவரை ஏமாற்றி சென்ற 2 மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |