Categories
தேசிய செய்திகள்

பிரசவ வலியால் துடித்த இளம்பெண்… ஈவு இரக்கமின்றி நடந்து கொண்ட மருத்துவமனை ஊழியர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஆஸ்பத்திரி வாசலிலேயே பல மணி நேரம் காத்திருக்க வைத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தானே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ரோகினி மாருதி முக்னே. இருபத்தி எட்டு வயதாகும் இந்த பெண் நிறைமாத கர்ப்பிணி ஆவார். இவர் நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் பிரசவவலி எடுத்ததை தொடர்ந்து இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் பிரசவ வலியால் துடித்த பெண்ணை சற்றும் கவனிக்காது அவரவர் வேலையை செய்து வந்துள்ளனர்.

மேலும் அவருடைய உறவினர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்குமாறு கூறியதற்கு அவருக்கு உடனடியாக இரத்த பரிசோதனை மேற்கொண்டு ரத்தம் செலுத்தப்பட்ட பின்னரே அனுமதிப்போம் என கூறியுள்ளனர். உறவினர்கள் எவ்வளவோ மன்றாடியும் அவரை அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் பிரசவ வலியுடன் அலறியடித்து ஆஸ்பத்திரிக்கு வந்த அவரை  ஆஸ்பத்திரி வாசலிலேயே சுமார் 11 மணி நேரம் வரை காத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி மேற்பார்வையாளர் ராஜேஷ் மோரோ இந்த சம்பவத்தில் தலையிட்டு இரவு 10 மணி அளவில் அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தார். பிரசவ வலியால் வந்த பெண்ணை மனிதாபிமானமற்ற முறையில் மருத்துவமனை வாசலிலேயே காக்க வைத்த சம்பவம் காண்போர் கண்களை கலங்கச் செய்தது.

Categories

Tech |