Categories
தேசிய செய்திகள்

தாயை பிரிந்து தவித்த குட்டி யானை… மீண்டும் தாயுடனே சேர்த்த வனத்துறையினர்… வைரலாகும் உருக்கமான வீடியோ..!!!

தொலைந்து போன யானை குட்டியை வனத்துறையினர் அதன் தாயிடம் விட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வனத்துறை அலுவலர்கள் சிலர் ஒரு குட்டி யானையை அதன் தாயுடன் சேர்த்து வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுதாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழக வனப்பகுதியில் ஒரு குட்டியானை ஒரு குழியில் சிக்கிக் கொண்டது. இதனை மீட்ட வனத்துறையினர் அதனை பத்திரமாக தன் தாயுடன் கொண்டு சேர்க்கின்றனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் அந்த அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |