Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்த அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த போலீஸ்….!!

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாதுஷா மற்றும் காஜா நிஜாமுதீன் என்பதும் அவர்கள் இருவரும் தங்களது கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பாதுஷா மற்றும் காஜா நிஜாமுதீனை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 18 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

 

Categories

Tech |