டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் குவாலிபயர் 1 ஆட்டத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
14 வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபயர் 1 ஆட்டத்தில் டெல்லி – சிஎஸ்கே அணிகள் மோதின .இதில் முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இதன் பிறகு 173 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு சிஎஸ்கே அணி விளையாடியது. இதில் அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 70 ரன்னும் , ராபின் உத்தப்பா 63 ரன்னும் எடுத்து அசத்தினார் இறுதியில் கேப்டன் டோனி அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இறுதிக்கட்டத்தில் 6 பந்துகளில் 3 பவுண்டரி ,ஒரு சிக்சர் அடித்து விளாசி 18 ரன் குவித்து அணியை வெற்றி பெற செய்தார் .நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் டோனியின் ஆட்டம் சிறப்பாக இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் இந்த விமர்சனங்களுக்கு கேப்டன் தோனி பதிலடி கொடுத்துள்ளார்.மிகவும் இக்கட்டான சூழலில் தனது திறமையை வெளிப்படுத்தி வெற்றிகரமாக முடித்துள்ளார். போட்டி முடிந்த பிறகு கேப்டன் தோனி கூறும்போது,” எனது இன்னிங்ஸ் முக்கியமான ஒன்றாகும். அதே சமயம் டெல்லி அணி பவுலிங்கில் பலம் பொருந்தியது .
இதனால் இந்த ஆடுகளத்தில் அவர்களுடைய பந்தை எதிர்கொள்வது சவாலானதுதான் என்பதை நாங்கள் அறிவோம். பயிற்சியின் போது எனது பேட்டிங் சிறப்பாக இருந்தது .ஆனாலும் களத்தில் அதைப்பற்றி நான் அதிகம் யோசிக்கவில்லை. பந்தை சரியாக கணித்து ஆட்டத்தை வெளிப்படுத்தினேன் .மேலும் ருதுராஜ்,ராபின் உத்தப்பா இருவரின் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. ஆனால் கடந்த சீசனில் நாங்கள் முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.அதோடு ஒரு சில ஆட்டங்களை தவறி விட்டோம் .ஆனால் இந்த சீசனில் வலுவாக திரும்பியுள்ளோம் “, இவ்வாறு கேப்டன் தோனி கூறியுள்ளார்.