பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத கர்ப்பிணிகளுக்கு ஆபத்துகள் உள்ளதாக தேசிய சுகாதார சேவை எச்சரித்திருக்கிறது.
பிரிட்டனின் அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்ககூடிய பராமரிப்பு தேவைப்படக்கூடிய நோயாளிகள் ஆறு பேரில் ஒருவர் தடுப்பூசி செலுத்தாத கர்ப்பிணிப் பெண்ணாக உள்ளதாக புள்ளி விவரங்களில் தெரியவந்திருக்கிறது. இந்த வருடத்தின் ஜூலை மாதம் மற்றும் செப்டம்பர் மாதத்திற்குள் கூடுதல் கார்போரியல் சவ்வு ஆக்ஸிஜனேற்றத்திற்கான சிகிச்சை பெற்ற 118 பேரில் 20 கர்ப்பிணிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 19 நபர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதித்தால் அது அவர்களின் குழந்தைக்கும் அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கர்ப்பிணிகளை இரண்டு தவணை தடுப்பூசி செலுத்த வைக்கும் முயற்சியாக, NHS இங்கிலாந்து புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கிறது.
அதில் தடுப்பூசி செலுத்தாத மக்கள் சந்திக்கும் ஆபத்துகளை குறிப்பிட்டிருக்கிறது. 2471 பெண்களிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், தொற்றால் பாதிப்படைந்த கர்ப்பிணிகள் ரத்த வெள்ளையணுக்கள் மற்றும் சிவப்பு அணுக்கள் குறைவு, கர்ப்பகால நீரிழிவு, சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.