தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் 113 வாக்குகள் வித்தியாசத்தில் பிரகாஷ் ராஜ் தோல்வியடைந்துள்ளார்.
நேற்று தெலுங்கு சினிமா நடிகர் சங்கத்தின் தலைவர், பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவும், அவரை எதிர்த்து பிரகாஷ் ராஜும் போட்டியிட்டனர். பவன் கல்யாண், சிரஞ்சீவி உள்பட பல பெரிய நடிகர்களின் ஆதரவு பிரகாஷ் ராஜுக்கு இருந்ததால், அவர் அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது. மேலும் மொத்தம் 900 உறுப்பினர்களில் 833 பேருக்குதான் வாக்களிக்கும் உரிமை இருந்தது .
நேற்று நடைபெற்ற தேர்தலில் 655 வாக்குகள் பதிவானது. இந்நிலையில் விஷ்ணு மஞ்சு 381 வாக்குகளும், பிரகாஷ் ராஜ் 274 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்மூலம் 113 வாக்குகள் வித்தியாசத்தில் விஷ்ணு மஞ்சுவிடம் பிரகாஷ் ராஜ் தோல்வியடைந்துள்ளார். நாக சைதன்யா, ஜூனியர் என்டிஆர், பிரபாஸ் போன்ற சில முன்னணி நடிகர்கள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.