கேரள மாநிலத்தில் தனது மனைவியை பாம்பை வைத்து கடிக்க செய்து கொலை செய்த கணவனை நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு அளித்துள்ளது.
கேரள மாநிலம் அடூரை சேர்ந்த சூரஜ் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி உத்ரா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிலையில் ஒரு குழந்தை உள்ளது. திருமணத்தின்போது உத்ராவின் பெற்றோர் அவருக்கு 784 கிராம் தங்க நகைகள் மற்றும் கார் என ஏகப்பட்ட வரதட்சணைகளை வழங்கியுள்ளனர். இந்நிலையில் சூரஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆசை பட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மார்ச் 2-ஆம் தேதி தனது கணவன் வீட்டிற்கு வெளியில் உத்ராவை ஒரு பாம்பு கடித்தது. இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பல நாட்கள் போராடி ஏப்ரல் 22 அன்று உத்ரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் அவரது பெற்றோர் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் மே 7-ஆம் தேதி உத்ரா தனது பெற்றோர் வீட்டில் எந்த அசைவுமின்றி பிணமாக கிடந்தார். இதை பார்த்த உத்ராவின் தந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பாம்பு கடித்து விட்டதால் அவர் இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். பின்னர் வீடு திரும்பிய பெற்றோர்கள் படுக்கையறையில் தேடிப் பார்த்தபோது அலமாரியின் கீழ் ஒரு விஷப் பாம்பு இருந்தது. அந்த பாம்பை அவர்கள் அடித்துக் கொன்றனர். பிறகு தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உத்தரவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பெயரில் சூரஜை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. மனைவியை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக யூடியூபில் தேடியுள்ளார். அப்போது ஒரு பாம்பாட்டி உடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பாம்பாட்டிக்கு பணம் கொடுத்து ஒரு பாம்பை ஏற்பாடு செய்துள்ளார். முதல் முயற்சி தோல்வியுற்றது. இதனால் மீண்டும் மற்றொரு விஷ பாம்பை பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி உத்தராவின் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டுள்ளார். அந்த பாம்பு உத்தராவை இரண்டு முறை கடித்ததால் அவர் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் நடந்த போது சூரஜ் எதுவும் நடக்காததுபோல் கதறி அழுது நாடகம் ஆடியுள்ளார். தனது மனைவியை கொலை செய்வதற்கு இரண்டு முறை முயற்சி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த கேரளா சிறப்பு நீதிமன்றம் உத்தராவை பாம்பை பயன்படுத்திய கொலை செய்த கணவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளனர். மேலும் அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரிதிலும் அரிதான வழக்கு என்று தெரிவித்துள்ளனர்.