Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில்…. பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு… 5 பேர் வீர மரணம்…!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையினர் 5 பேர் வீர மரணமடைந்துள்ளனர்..

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் காட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சுற்றி வளைத்து அவர்களை மடக்க முயற்சித்தபோது தீவிரவாதிகள் காட்டுப் பகுதியிலிருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.. இதில் 4 இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு அதிகாரி படுகாயமடைந்தனர்..

பின்னர் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்ததாக பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர். ஆகவே பாதுகாப்பு படையைச் சேர்ந்த 5 நபர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.. மேலும் 2 பேர் காயமடைந்து இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது..

பூஞ்ச் செக்டர் பகுதியில் இந்த சோதனை நடைபெற்றது.. இந்த சண்டையில் தீவிரவாதிகள் 2 பேர் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்து அவர்களை கைது செய்ய வேண்டும், அல்லது சுட்டு வீழ்த்த வேண்டும் என்று பாதுகாப்பு படையினர் அதற்கான ஆயத்தங்களுடன் சுற்றிவளைத்து அங்கே தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்..

சமீபத்தில் நமக்கு தெரியும். பல பொதுமக்களையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் அடக்கவேண்டும்.. கொல்ல வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் காஷ்மீரில் எடுக்கபட்டு வருகிறது.. இத்தகைய சூழ்நிலையில்தான் இன்று மிகவும் சோகமான செய்தியாக பாதுகாப்பு படையைச் சேர்ந்த 5 பேர் வீரமரணம் அடைந்தனர்.. ஆகவே காஷ்மீரில் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது..

Categories

Tech |