Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 ELIMINATOR : இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு ….? பெங்களூர் VS கொல்கத்தா இன்று மோதல் …..!!!

2021 சீசன் ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் புள்ளிபட்டியல்        3-வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், 4-வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேறும் .இதில் வெற்றி பெறும் அணி முதல் குவாலிபயர் சுற்றில் தோல்வி அடைந்த டெல்லி அணியுடன் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது குவாலிபயர் சுற்றில்  விளையாடும் .இதில் நடப்பு சீசனில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி  அணி 9 வெற்றி ,5 தோல்வியுடன் புள்ளிபட்டியல் 3-வது இடத்தில் உள்ளது.

இதுவரை ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. எனவே ஆர்சிபி அணியின் கனவு நினைவாக இன்னும் 3 போட்டிகளை வெற்றி பெறவேண்டும். அதேசமயம் ஆர்சிபி அணியில் பேட்டிங்கில் மேக்ஸ்வெல் ,கே.எஸ்.பரத் ,கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் சிறப்பாக ஆடுகின்றனர் .அதேபோல் பந்துவீச்சில் முகமது சிராஜ் , சாகல் , ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் மிரட்டி வருகின்றனர் .அதேசமயம் ஆர்சிபி அணியை போலவே கொல்கத்தா அணியும் சமபலத்துடன் இருக்கிறது .நடப்பு சீசனில் கொல்கத்தா அணி 7 தோல்வி , 7 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது .இதில் பேட்டிங்கில் திரிபாதி ,சுப்மன் கில் , நிதிஷ்  ராணா மற்றும்  வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதேபோல் பந்து வீச்சிலும் வருண் சக்ரவர்த்தி, ஷிவம் மாவி, சுனில் நரைன் மற்றும் பெர்குசன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.இதனிடையே இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த 2 லீக் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியும் , 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .இந்திய நேரப்படி இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் தொடங்குகிறது.

Categories

Tech |