இருசக்கரம் வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் போடாமல் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் போட்டு செல்ல வேண்டும் என்று அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை சார்பாக மக்களிடத்தில் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் ஹெல்மெட் போடாமல் அலட்சியமாக இருப்பதால் சாலை விபத்துகளில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஈரோட்டில் அதன் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனாலும் இந்த மாவட்டத்தில் 75 சதவீதம் பேர் ஹெல்மெட் போடாமல் செல்கின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் பாதுகாப்பாக செல்வதற்காக நாளை முதல் ஹெல்மெட் போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் ஹெல்மெட் போடாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், அவர்களது வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்வர். ஆகவே வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் போட்டு சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்துள்ளார்.