கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் பரணிதரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது நண்பரான கார்த்திக் என்பவரோடு கிருஷ்ணா கார்டன் பகுதியில் நடந்து சென்றுள்ளார். இவர்களைப் பின்தொடர்ந்து வந்த வாலிபர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி பரணிதரனின் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து பரணிதரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அரவிந்த் குமார் என்ற வாலிபர் செல்போனை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அரவிந்த்குமாரை கைது செய்து செல்போனை மீட்டனர்.