சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இந்நிலையில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சிவராமன் நகரில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் சட்டவிரோதமாக 83 பைகளில் 4 ஆயிரத்து 150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.
இதனை அடுத்து ரேஷன் அரிசி பதுக்கிய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் தப்பி ஓடிய சிவா என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 ஆயிரத்து 150 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.