பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரித்தானியாவில் ஆறு முக்கிய பிரச்சினைகளுக்கு மத்தியில் தனது குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மான்செஸ்டரில் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் போரிஸ் ஜான்சன், அவருடைய மனைவி கேரி மற்றும் மகன் வில்ஃப் ஆகியோருடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மார்பெல்லாவுக்கு பயணம் சென்றுள்ளார். இதையடுத்து கோஸ்டா டெல் சோலில் உள்ள சொகுசு வில்லாவில் வருகின்ற வியாழக்கிழமை வரை தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பிரித்தானியாவில் பிரதமர் ஓய்வெடுக்க சென்றுள்ள நிலையில் அந்நாட்டில் ஆறு முக்கிய சிக்கல்கள் தற்போது நிலவி வருகிறது.
அவை எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள்கள் விலையேற்றம் மற்றும் சப்ளையர்கள் சரிவு, மாதாந்திர உதவித்தொகை ரத்து, எரிபொருள் டேங்கர்களை இயக்க ராணுவம் வரைவு செய்யப்பட்டது, உணவு விலையேற்றத்தால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், தொழிற்சாலைகள் உற்பத்தி நிறுத்தம் உள்ளிட்ட 6 சிக்கல்கள் ஆகும். இவ்வாறு பிரித்தானியாவில் ஆறு முக்கிய சிக்கல்கள் நிலவி வரும் சூழலில் பிரதமர் ஓய்வெடுக்க சென்றிருப்பதால் விமர்சனங்கள் எழுந்துள்ளன.