Categories
அரசியல் மாநில செய்திகள்

4 நாட்கள் மட்டுமே இருக்கு…. அந்த காலகட்டத்தை தமிழகம் தாங்காது…. கமலஹாசன் அறிக்கை…!!!

நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாக தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை தலைதூக்கலாம் என்று அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் ஒரு மின்வெட்டு காலகட்டத்தை தமிழகம் தாங்காது என மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனல் மின்நிலையங்கள் தங்கு தடையின்றி இயங்க நிலக்கரி அவசியமாக உள்ள நிலையில் நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசும்  நிலக்கரி இறக்குமதியை அதிகரித்து அனல் மின் நிலையங்களுக்கு தங்குதடையின்றி நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |