Categories
மாநில செய்திகள்

125 வருஷம் கடந்தாச்சு….. சாமியாக மாறிய ஆங்கிலேய பொறியாளர்….. தமிழக விவசாயிகள் புகழ் வணக்கம்….!!

தமிழகத்தில் உள்ள தென் மாவட்டத்தின் வறட்சியைப் போக்குவதற்காகவும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் கேரள மாநிலம் இடுக்கியில் மேற்கு நோக்கி பாயும் முல்லைப்பெரியாறு அணையின் குறுக்கே அணை கட்டி உருவாக்கப்பட்டது தான் முல்லைப் பெரியாறு அணை. இந்த ஆணையானது ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் அவர்களால் 1895 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் நீரானது தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்கு தேவையான நீரையும், ஒரு கோடி மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

இந்த அணை கட்டப்பட்டு நேற்றுடன் 125 ஆண்டுகள் முடிவடைந்ததை முன்னிட்டு தமிழக கேரள எல்லையான லோயர் கேம்ப் பகுதியில் உள்ள மணிமண்டபத்தில் பென்னி குயிக்கின் சிலைக்கு ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். அப்பொழுது முல்லைப்பெரியாறு அணை கட்டும்பொழுது உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் புகழ் நீடூழி வாழவேண்டும் என்றும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Categories

Tech |