Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு ரேஷன் கடைகளில் பட்டாசு விற்பனை…. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்….!!!

தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவு ரேஷன் கடைகளில் பட்டாசு விற்க முடிவு செய்ததை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூட்டுறவு சங்கங்கள் சார்பில் தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடைகள் துவங்குவது வழக்கம். கூட்டுறவு கடைகளில் குறைந்த விலையில் பட்டாசு விற்கப்படுவதால் ஏராளமான மக்கள் வாங்கினார்கள். சில ஆண்டுகளாக வெளிச் சந்தையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதால் வாடிக்கையாளர்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை. ரேஷன் கடைகளில் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது. ஆனால் ஆண்டுதோறும் தீயணைப்பு உள்ளிட்ட துறைகளிடம் அனுமதி பெறாமல் பட்டாசு விற்கப்படுகிறது.

இதனையடுத்து நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளி வருகிறது. அதனால் ரேஷன் கடைகளில் பட்டாசு விற்பனை செய்வதற்காக ஒவ்வொரு கடைக்கும் எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள பட்டாசு தேவைப்படும் என்ற பட்டியலை சேகரித்து அதற்கு ஏற்ப 500,1000 மற்றும் 2000 ரூபாய் மதிப்புள்ள கிப்ட் பாக்ஸ் பட்டாசுகளை ரேஷன் கடைகளில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றைப் பொதுமக்கள் வாங்கவில்லை என்றால் ஊழியர்கள் வாங்க வேண்டும் என்று அலுவலர்கள் கூறியுள்ளார். அதனால் ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

Categories

Tech |