Categories
தேனி மாவட்ட செய்திகள்

400க்கும் மேற்பட்ட இடங்கள்… 5-ஆம் கட்ட தடுப்பூசி முகாம்… கலை நிகழ்சிகள் மூலம் விழிப்புணர்வு…

கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு கலை நிகழ்சிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. அதன் படி தேனி மாவட்டத்தில் 5-ஆம் கட்ட சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் மொத்தம் 400க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 60000 கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி முகாம்கள் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கலை நிகழ்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போட்டுகொள்ளதவர்கள் தானாக முன்வந்து ஊசி செலுத்திகொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் முரளிதரன் போடி ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

Categories

Tech |