Categories
சினிமா தமிழ் சினிமா

‘ரெமோ’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா?… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

ரெமோ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரெமோ. பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் ஆணாகவும், பெண்ணாகவும் நடித்து அசத்திய இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெட் உயர்ந்தது. மேலும் ரெமோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சஸ்பென்ஸாக முடிந்ததால், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கும் என கூறப்பட்டது.

Siva took 8 months to come on board: Bakkiyaraj Kannan

இந்நிலையில் ரெமோ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கடைசியாக வெளியான சுல்தான் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இதனால் பாக்யராஜ் கண்ணன்  ரெமோ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |