மிர்ச்சி சிவா, ஜீவா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கலகலப்பு-2 . ஜீவா, மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின்தெரசா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் மிர்ச்சி சிவா, ஜீவா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி கோல்மால் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தான்யா ஹோப், பாயல் ராஜ்புட் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் பிரபல கன்னட இயக்குனர் பொன் குமார் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் ஜாகுவார் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.