Categories
தேசிய செய்திகள்

அசாம் சிறையில் கைதிகளுக்கு எய்ட்ஸ்… காரணம் என்ன தெரியுமா….? அதிர்ச்சியளிக்கும் தகவல்…!!!

அசாம் சிறைகளில் உள்ள கைதிகளில் பெண்கள் உட்பட சுமார் 85 கைதிகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

அசாம் சிறைகளில் சுமார் 85 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் மேலும் அதிர்ச்சியூடுவது என்னவென்றால் அவர்களில் சில பெண் கைதிகளும் அடங்குவர் என்பதாகும். அசாம் மாநிலம் நாகோன் நகரில் மத்திய சிறை மற்றும் சிறப்பு சிறை உள்ளன. இந்த மத்திய சிறையில் உள்ள 40 கைதிகளும், சிறப்பு சிறையில் 45 கைதிகளும் என மொத்தம் 85 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களில் சில பெண் கைதிகளும் அடங்குவர்.

இத்தகவலை நாகோன் அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் எல்.சி.நாத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், போதைப் பழக்கம் காரணமாக அந்தக் கைதிகளுக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றார். சிறையில் போதைப் பழக்கம் உடைய கைதிகள் பலர், போதை மருந்தை செலுத்திக்கொள்ள பலரும் ஒரே ஊசியை பயன்படுத்திக் கொள்கின்றனர். அதன்மூலமாகத் தான் அச்சிறைக்கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |