Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தீய சக்திகளை அழிக்க சூப்பர் ஹீரோவாக மாறிய சன்னி லியோன்..!!

தீய சக்திகளை அழிப்பதற்காக ‘கோர்’ என்ற சூப்பர் ஹீரோவாக உருமாறியுள்ள நடிகை சன்னி லியோன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சியான கதாபாத்திரங்களில் கலக்கிவந்த நடிகை சன்னி லியோன் தற்போது சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். பாலிவுட் சினிமாக்கள், டிவி ஷோக்கள் என பிஸியாக உள்ள நடிகை சன்னி லியோன் தற்போது சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளார்.

Image result for Sunny Leone || Safety is just a call away this Halloween kore,not from this planet but ready to save

 

 தீய சக்திகளிடமிருந்து உலகைக் காக்கும் ‘கோர்’ என்ற சூப்பர் ஹீரோ கேரக்டராக அவதாரம் எடுத்துள்ள அவர், அந்தக் கதாபாத்திரத்துக்கான அறிமுக காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோர் இந்த கிரகத்தை சேர்ந்தவள் இல்லை. ஆனாலும் தீய சக்திகளிடமிருந்து உலகைக் காக்க தயாராக இருக்கிறாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Image result for Safety is just a call away this #Halloween! #Kore, not from this planet but ready to save the world from Evil

இதுகுறித்து சன்னி லியோன் கூறுகையில், ‘சூப்பர் ஹீரோ கதையை நானும் எனது கணவர் டேனியல் வெப்பரும் இணைந்து உருவாக்கினோம். அந்த வகையில் கோர் கதாபாத்திரம் தீய சக்திகளை அழிக்க வருகிறது’ என்றார். இதனிடையே, ஹாலிவுட் சூப்பர் ஹிட் படமான ‘மேட்ரிக்ஸ்’ பட கதாபாத்திரங்களின் லுக் போன்று சன்னி லியோனின் கோர் லுக் அமைத்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Image result for Sunny Leone || Safety is just a call away this Halloween kore,not from this planet but ready to save

பாலிவுட் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சூப்பர் ஹீரோவாக தனக்கு நடிக்க ஆசை என்று விருப்பம் தெரிவித்திருந்தார் சன்னி. இதையடுத்து தற்போது அதை நிறைவேற்றியுள்ளார். கோர் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Categories

Tech |