டாடா நிறுவனமானது நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்குவதில் தற்பொழுது வெற்றி கண்டுள்ளது. மத்திய அரசானது ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனமானது ஏலம் எடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு 61 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை சமாளிக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறி உள்ளது.
எனவே டாடா நிறுவனத்திற்கே மீண்டும் ஏர் இந்தியா கைமாறி உள்ளது. இந்நிலையில் இதனை குறித்த பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது அவர் கூறியதாவது, “பிரதமர் மோடி 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடந்த ஆண்டு தனக்காக இரண்டு விமானங்களை வாங்கினார் . ஆனால் தற்பொழுது 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியாவின் ஒட்டுமொத்த ஏர் இந்தியாவையும் தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு விற்பனை செய்துள்ளார்” என்று கூறியுள்ளார்