Categories
தேசிய செய்திகள்

நவராத்திரி விழாவில் வழங்கப்பட்ட பிரசாதம்… 30 பேருக்கு வாந்தி, மயக்கம்… அப்படி என்னதான் கொடுத்தாங்க…!!!

மராட்டிய மாநிலம் அருகே நவராத்திரி விழாவில் உணவு உண்ட 30 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்பாட் தாலுகாவை சேர்ந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் நவராத்திரி விழாவை கொண்டாடினர். பின்னர் அவர்களுக்கு தினையால் செய்யப்பட்ட ஒரு உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதை பலரும் வாங்கி சாப்பிட்டனர். இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் சாப்பிட்ட உணவு பொருட்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |