காஞ்சிபுரம் மாவட்டம் படூர் அருகே நகை கடை சுவரில் துளையிட்டு கடைக்குள் இருந்த வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
காஞ்சிபுரமாவட்டம் படூர் கூட்டு ரோட்டில் நாராயணன் என்பவருக்கு சொந்தமான பவானி அடகு கடை மற்றும் பாத்திர கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் இரவில் கடை அடைக்கப்பட்டிருந்த சிறிது நேரத்திலையே கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையிலிருந்த வெள்ளி மெட்டி, கொலுசு, வெள்ளி மோதிரம் என சுமார் அரை கிலோ வெள்ளி நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
மேலும் தங்க நகைகள் வைத்திருந்த லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் தப்பியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.