Categories
உலக செய்திகள்

“வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு உதவும் உள்ளம்!”.. நெகிழ்ச்சியான பின்னணி..!!

லண்டனில் வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு உதவி செய்து வரும் நபர், அவர்களுக்காக 400-க்கும் அதிகமான கிறிஸ்துமஸ் பரிசுகளை சேகரித்திருக்கிறார்.

லண்டனில் வசிக்கும் Verral Paul-Walcott என்ற 35 வயது நபர், ஏழை குடும்பங்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். முதலில், ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், இவரிடம் தன் பிள்ளைகளுக்கு பள்ளி சீருடை வாங்கி தரமுடியுமா? என்று கேட்டிருக்கிறார். அப்போதிருந்து தான், இவர் உதவி செய்ய தொடங்கியிருக்கிறார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த வருடம் ஊரடங்கின் போது, மக்கள் பலரும், பல விதமான பிரச்சனைகளை எதிர் கொண்டார்கள். அந்த சமயத்தில் குடியிருப்பு இல்லாமல் வாழும் ஒரு பெண்ணை சந்தித்தேன். அவரிடம் உங்களுக்கு பசிக்கிறதா? என்று கேட்டேன். அவர் ஆம் என்று கூறியதால் அவருக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்தேன்.

மேலும் அவர் குளிரில் நடுங்கி கொண்டிருந்ததால், கையுறை வாங்கி கொடுத்த போது அவர் கண்களில் இருந்து நீர் பெருகியது. அன்றிலிருந்து, நம்மால் முடிந்த உதவிகளை யாருக்காவது செய்வோமே என்று தீர்மானித்தேன்.

அதன்பின்பு, கஷ்டப்படுபவர்களுக்கு, உணவு கொடுப்பது, குழந்தைகளுக்கு பள்ளி சீருடை வாங்கி கொடுப்பது, போன்றவற்றை செய்ய தொடங்கினேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் தொண்டு நிறுவனங்களினால் உதவிகள் செய்யவில்லை. JustGiving என்ற இணையதள பக்கத்தில், நிதி திரட்டி உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

Categories

Tech |