Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த மேற்கூரை… அதிர்ஷ்டவசமாக தப்பிய குடும்பத்தினர்… வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு…!!

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் கூலித்தொழிலாளி வீட்டின் கூரை இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபாளையம் பகுதியில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் பரமசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார் கூலித்தொழிலாளியான இவருக்கு பேபி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ராசிபாளையம் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்தமழை பெய்துள்ளது. அந்த மலையில் நள்ளிரவு சமயத்தில் பரமசிவத்தின் வீட்டின் ஓடுகள் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

இதனையடுத்து சத்தம் கேட்டு விழித்த கொண்ட பரமசிவம் உடனடியாக மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இதனை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே மற்ற ஓடுகளும் இடிந்து விழுந்துள்ளது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் உடைந்து சேதமடைந்துள்ளது. மேலும் சரியான நேரத்தில் வீட்டில் இருந்து வெளியேறியதால் பரமசிவம் மற்றும் குடும்பத்தினர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு இழப்பீடு தொகையாக பரமசிவத்திற்கு 5000 ரூபாய் மற்றும் மாளிகை பொருட்கள், உடைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் கிராமங்களில் மழை நீர் சூழ்ந்து, தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்த நிலையில் துப்புரவு பணியாளர்கள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |