தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்துவருவதால் அங்குள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதில் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் திருவள்ளுவர் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் அங்குள்ள பூண்டி ஏரிக்கு நீர்வரத்து மிக வேகமாக அதிகரித்துள்ளது. மேலும் 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி அணையின் நீர் மட்டம் மழை பெய்ததால் நீர்வரத்து வரத்து அதிகரித்து 33.95 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என்று ஏற்கனவே பொதுப்பணித் துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் பூண்டி அணையில் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 1000 கனஅடி உபரி நீரை திறந்து விடப்பட்டுள்ளது.