Categories
மாநில செய்திகள்

தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலம் தமிழகம் மட்டும் தான்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளேடு கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ‘மெர்ச்சன்ட்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்ற வணிக பிரதியை வெளியிட்டுள்ளார். அதன் பிறகு பேசிய அவர், தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான உள்கட்டமைப்பு பணிகளை சீர்மைப்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையடுத்து தெற்கு ஆசியாவிலேயே தமிழ்நாடு தான் தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலமாகும். திமுக அரசு ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் தொழில்துறையில் புத்துணர்ச்சி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு ஏற்றுமதியில் 3 வது பெரிய மாநிலங்களாக உள்ளது. மேலும் தமிழ்நாட்டை 3 வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |