Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் விழுந்த தங்கை….. காப்பாற்ற முயன்ற அண்ணன்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் விசைத்தறி தொழிலாளியான சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சகுந்தலா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் சகுந்தலாவிற்கு கடந்த சில நாட்களாக மனநல பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனை சென்று விட்டு சகுந்தலாவை தேவராயம்பாளையத்தில் இருக்கும் அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சின்னதுரை ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் சகுந்தலா விழுந்துவிட்டார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரர் சுந்தரம் என்பவர் தனது சகோதரியை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்து விட்டார். ஆனால் கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகுந்தலாவின் சடலத்தை மீட்டனர். ஆனால் தீயணைப்பு வீரர்களால் சுந்தரத்தின் சடலத்தை மீட்க முடியவில்லை. இதனால் அவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |