காஞ்சிபுரத்தில் 2 நிறுவனங்கள் ரூ 250 கோடி வருமானத்தை மறைத்திருப்பதாக வருமான வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் துணிக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில் கடந்த 4 ஆண்டுகளாக விற்பனை கணக்கில் வரி ஏய்ப்பு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. கணக்கில் வராத ரூ 44 லட்சம், 9.5 கிலோ தங்கம் பறிமுதல். ரூ 100 கோடி வரி ஏய்ப்பு கண்பிடிக்கப்பட்டுள்ளது..
கடந்த 5ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உட்பட 34 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.. குறிப்பாக பச்சையப்பாஸ் சில்க்ஸ், எஸ்கேபி சிட் பண்ட் நிதி நிறுவனம், செங்கல்வராயன் சில்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில்3 நிறுவனங்கள் 250 கோடி ரூபாய் வருமானத்தை மறைந்திருப்பதாக வருமான வரித் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.. வருமான வரித் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில், இந்த சோதனையில் 3 நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் தனித்தனியாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது..
காஞ்சிபுரத்தை சேர்ந்த பச்சையப்பாஸ், செங்கல்வராயன் சில்க் நிறுவனம் 100 கோடி அளவும், எஸ்.கே.பி நிதி நிறுவனம் 150 கோடி அளவும் வருமானத்தை மறைத்திருக்கிறது.. பச்சையப்பாஸ், செங்கல்வராயன் சில்க்ஸின் இடங்களில் ரூ 44 லட்சம், 9.5 கிலோ தங்க நகைகள் சிக்கியது.
இந்த சோதனையில் கோடிக்கணக்கில் கடன் கொடுத்ததற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எஸ்கேபி நிறுவனத்தின் பண்ணை வீடுகள், சொகுசு கார்களுக்கான ஆவணங்களும் சோதனையில் சிக்கின. எஸ்.கே.பி சிட் பண்ட் நிறுவனம் குறுகிய காலத்திலேயே 400 கோடி சம்பாதித்துள்ளது. நிதி நிறுவனத்தில் இருந்து கணக்கில் வராத 1.35 கோடி ரொக்கம் 7.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது..
அறிக்கை இதோ :