Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நில தகராறு” அதிமுக பிரமுகர் படுகாயம்……. 18 பேர் மீது வழக்கு…..!!

திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தகராறு ஏற்பட்ட தகராறில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகாயம்அடைந்தார்.

திருவாரூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பரமசிவத்தின் உறவினரான ஜெயமாலினி என்பவர் நிலம் வாங்கியது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த கோபாலன் என்பவருடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜெயமாலினி மற்றும் பரமசிவம் ஆகியோர் உடன்,

Image result for நிலத்தகராறு

அங்கு வந்த கோபால், ராமன் மற்றும் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூரிய கற்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பரமசிவம் காயம் அடைந்ததால் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 18 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  பரமசிவம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரும், அதிமுக பிரமுகரும் ஆவார் என்பது குறிப்பிடதக்கது.

Categories

Tech |