நட்சத்திர தம்பதிகளான நாகசைதன்யா-சமந்தா ஆகிய இருவரும் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தங்கள் விவாகரத்து செய்தியை அதிகாரபூர்வமாக தெரிவித்தனர். இந்த செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் பெரும்பாலானோர் சமந்தாவை மட்டுமே குற்றம்சாட்டி கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதனால் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்களும் பெண்களும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதற்கு வனிதா விஜயகுமார் சமந்தாவுக்கு ஆதரவாக “இங்கு சமுதாயம் என்று ஒன்று இல்லை. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். நாம் எடுக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் மட்டும்தான் மக்கள் பார்க்கிறார்கள். வாழ்க்கை விலைமதிப்பற்ற ஒன்று. அனைத்துமே ஏதோ ஒரு காரணத்திற்காக தான் நடக்கிறது. நீங்கள் முன்னேறிக் கொண்டே இருங்கள்” என கூறியுள்ளார்.