Categories
சினிமா தமிழ் சினிமா

ஒப்பந்தமான படங்களில் இருந்து விலகல்…. காஜலின் முடிவுக்கு காரணம் என்ன…. வெளியான தகவல்….!!

திரை துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் சென்ற வருடம் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிப்புக்கு இடைவெளி விட்ட இவர் சமீபத்தில் தி கோஸ்ட், ரவுடி பேபி போன்ற படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் ரவுடி பேபி திரைப்படத்தில் ஹன்சிகாவும் தீ கோஸ்ட் படத்தில் காஜலுக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.

ஒப்பந்தமான படங்களில் இருந்து காஜல் விலகியதற்கான காரணம் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் சமீப நாட்களாக காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக செய்தி பரவி வருகிறது. அதோடு காஜல் அகர்வாலும் விரைவில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட போவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |