திரையுலகைப் பொறுத்தவரை நடிகைகள் வெகுகாலம் சினிமாவில் நிலைத்து இருப்பதில்லை. திருமணம் முடிந்ததும் சிலருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கும். இதனால் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து சினிமாவில் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணம் முடிந்த நடிகை ஒருவர் தற்போது மீண்டும் சினிமாவிற்கு வருகை தந்துள்ளார். அவர் முன்னணி நடிகர் ஒருவருடன் சமீபத்தில் கதாநாயகியாக நடித்து வெளியான படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
எனவே மீண்டும் அவர் படங்களில் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எப்போதும்போல் திருமணம் ஆனதால் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. ஆனாலும் சில இயக்குனர்கள் அவரிடம் கதை கூறி அதில் அக்காவாக நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதைக் கேட்ட நடிகை இயக்குனர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்துள்ளார். அதாவது அக்கா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஓகே சொன்ன அவர் படத்தின் கதாநாயகி வாங்கும் சம்பளத்தை விட தனக்கு அதிகமாக கொடுக்க வேண்டும் என்று கூறி ட்விஸ்ட் வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியான இயக்குனர்கள் அந்த நடிகை வேண்டாம் என்று சென்று விட்டனர்.