வேளாண்மை துறை, மாநிலம் முழுவதும் 3391 உரக் கடைகளில் ஆய்வு செய்ததில் உரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 101 உரை கடைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி வெளியான செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் சம்பா பயிர் நடவு பணிகள் நடந்து வருகிறது. எனவே உரத் தேவை அதிகரித்துள்ளது.
அதனால் உர விற்பனை தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்களை போக்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் உர கண்காணிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் கண்காணிப்பு மையத்தை தொடர்பு கொண்டு உரம் தொடர்பாக புகார்கள் ஏதும் இருந்தால் அவற்றை பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவற்றின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 3391 தனியார் ஓரக் கடைகளில் வேளாண்மை துறையினரால் உரம் இருப்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை நடக்கிறதா போன்ற பணிகளை ஆய்வு செய்தனர். மேலும் புத்தக இருப்பு, உண்மை இருப்பு, மற்றும் விற்பனை முனையை கருவில் உள்ள இருப்பிற்கு வித்தியாசம் காணப்படுவதற்காக 84 உரக்கடைகளில் உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கூடுதலாக உரம் இருப்பு வைத்துள்ள உரக்கடை உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு 6 கடைகள் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு உரக்கடை மீது எம்எஃப்எம்எஸ் என்ற குறியீட்டு எண்ணை தடை செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் விதிகளை பின்பற்றாத உரக்கடை உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.