தாய் தனது இரண்டு மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முத்துராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு யுவராணி, நித்யா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக முத்துராமன் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து முத்துமாரியின் தயாரான கோமதி தனது மகள் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த கோமதி அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது முத்துமாரி தனது இரண்டு மகள்களுடன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.