காங்கோ ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 55 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான வடக்கு மங்களா மாகாணத்தில் உள்ள பம்பா நகருக்கு அருகில் கங்கோ ஆற்றில் கடந்த புதன்கிழமை அதிகாலை படகு ஒன்று கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 39 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 55 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 75 பேர் காணாமல் போனதாகவும் மங்களா மாகாணத்தின் ஆளுநரின் செய்தி தொடர்பாளர் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தெளிவாக தெரியவில்லை. ஆனால் விபத்துக்குள்ளான படகில் மொத்தம் 400 பேர் பயணித்ததாக உயிருடன் தப்பிய ஒருவர் தெரிவித்துள்ளார். அதிலும் காங்கோ நாட்டில் மோசமான சாலை வசதி இருப்பதால் அங்கு ஆறும் துணை ஆறும் மக்களுக்கு ஒரு முக்கியமான நீர்வழி போக்குவரத்தாக அமைந்திருக்கிறது. மேலும் அங்கு இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவது அடிக்கடி சகஜமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.