Categories
தேசிய செய்திகள்

SHOCKING: இப்பல்லாம் ட்ரெயின்ல கூட பாதுகாப்பு இல்ல… ஓடும் ரயிலில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் ரயிலில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மும்பையை நோக்கி நேற்று இரவு லக்னோ மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் லகட்புரி நகரில் உள்ள ரயில் நிலையத்திற்கு வந்த பொழுது அங்கு படுக்கை பெட்டியில் பயங்கர ஆயுதங்களுடன் சில கொள்ளையர்கள் ஏறினார்கள். அவர்கள் பயணிகள் இடத்தில் ஆயுதங்களை காட்டி நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். அதுமட்டுமில்லாமல் பெண் பயணி ஒருவரை ஓடும் ரயிலில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதை தடுக்க முயன்ற 6 பயணிகளை அவர்கள் ஆயுதங்களை கொண்டு தாக்கினர்.

பின்னர் மும்பையின் கசாரா என்ற பகுதியில் ரயில் நுழையும் பொழுது ரயில் பயணிகள் கூச்சலிட்டனர். அதை பார்த்த ரயில்வே போலீசார் அங்கு விரைந்து கொள்ளையர்கள் 2 பேரை கைது செய்தனர். இதில் 6 பேர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அவர்களை துரத்தி சென்ற ரயில்வே போலீஸ் இரண்டு கொள்ளையர்களை பிடித்தனர். மீதி இருந்த 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளிடம் நகையை கொள்ளையடித்தது மட்டுமில்லாமல் பெண் பயணி ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |