தமிழகத்தில் இந்திய ரயில்வே ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி அதில் பலவகை திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. அந்த வகையில் ஐ.ஆர். சி.டி. சி. நிர்வாகம் சிறப்பு சுற்றுலா ரயில் ஸ்ரீ ராமாயண யாத்திரை என்ற பெயரில் மதுரையிலிருந்து ஸ்ரீ ரிங்வேர்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கபடும் என்று அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு இரயில் வருகின்ற நவம்பர் 16ம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை,சிதம்பரம், கடலூர் துறைமுகம்,விழுப்புரம், சென்னை எழும்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, ஹம்பி, நாசிக், சித்ரகுட் தாம், வாரணாசி, கயா சீதாமார்ஹி, ஜனக்பூர், அயோத்தியா, நந்திகிராம் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய மாவட்டங்கள் வழியாகச் சென்று நவம்பர் 28ஆம் தேதி ஸ்ரீ ரிங்வேர்பூரை சென்றடையும்.
இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி. பொது மேலாளர் ஏபி சுந்தரராஜன் வெளியிட்ட அறிவிப்பில், ஸ்ரீராம யாத்திரா சிறப்பு சுற்றுலா பயணம் 13 நாட்கள் ரயில் பயணத்திற்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.14,490 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சுற்றுலா பயணத்திற்கு முன்பதிவு செய்ய செய்யப்படலாம் மேலும் இந்த சிறப்பு சுற்றுலாப் பயணத்திற்கு தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இந்த சிறப்பு பயணத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளும் எல்.டி.சி என்ற விடுப்பு சலுகை பெற முடியும்
.இதையடுத்து சிறப்பு சுற்றுலா பயணத்தில் ரயில்களில் படுக்கை வசதி, உணவு வசதி, சுற்றுலா உதவிகள், ஒவ்வொரு பெட்டிக்கும் தனித்தனியாக காவலர்களும்,பயண காப்பீடு, முககவசம் மற்றும் கையுறை போன்ற அனைத்து வசதிகளையும் செய்து தரப்பட்டு கொரோனா நடவடிக்கையும் பின்பற்றப்பட வேண்டும் என்று எச்சரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவலை தெரிந்து கொள்ள 8287931974 என்ற என்ற எண்ணிற்கு அழைத்து தகவலை தெரிந்து கொள்ளலாம்.மேலும் www.irctcourism.com என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். எனவே ஸ்ரீ ராமாயண யாத்திரை என்ற 13 நாட்கள் சுற்றுப்பயணத்தை மக்கள் அனைவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.