கூலித்தொழிலாளி பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரதனபள்ளி பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான கந்தன் என்பவர் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து கந்தன் சம்புவை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த சம்புவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கந்தனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.