Categories
அரசியல்

என்னோடு போகட்டும்… என் மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை – வைகோ

என் மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிள்ளார்.

தென்காசி மாவட்டம் கலிங்கம்பட்டியில் ஊரக ஊராட்சி மன்ற தேர்தலில் வாக்களித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவே வெற்றிபெறும் என்று கூறினார். மேலும், உத்தரபிரதேச விவசாயிகள் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தது பேசிய அவர்,

எனக்கு என் மகன் அரசியலுக்கு வருவது விருப்பம் இல்லை. காரணம் நான் 56 வருடம் கஷ்டப்பட்டு உள்ளேன். 28 வருடம் லட்சக்கணக்கான கிலோமீட்டர் காரில் பிரயாணம், ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நடைபயணம், நூற்றுக்கணக்கான போராட்டங்கள், அஞ்சர வருடம் ஜெயிலில் வாழ்க்கை என  என் வாழ்வை ஓரளவுக்கு அழித்துக் கொண்டேன்.

இந்த அரசியல் வாழ்க்கை என்னோடு போகட்டும். என் மகனும் அந்த கஷ்டப்பட வேண்டாம் என்பதால் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. இருந்தாலும்  கட்சிக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் ? என்பது இருபதாம் தேதி தான் தெரியும்.  20ஆம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டம் போட்டு அதில் பெரும்பான்மை என்ற முடிவுக்கு வருவார்கள், அன்றைக்கு தான் தெரியும் என வைகோ பேசியுள்ளார்.

Categories

Tech |