Categories
மாநில செய்திகள்

வீட்டு சூழ்நிலை… வேலைக்குச் செல்லும் பள்ளி மாணவர்கள்… அதிரடி சோதனையில் சிக்கிய பலர்…!!!

கொரோனாவால் வேலைக்குச் செல்லும் பள்ளி மாணவர்களை மீட்பதற்கு நான்கு துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல குழந்தைகள் சிக்கியுள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. பள்ளிகள் மூடப்பட்ட காரணத்தினால் பல குழந்தைகள் வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளிகளில் படித்து வந்த ஒரு சிலர் தற்போது படிப்பை விட்டுவிட்டு கடையில் வேலை செய்து வருவதாக குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குழந்தை பாதுகாப்பு மாவட்ட அலுவலர் சைமன் தலைமையிலான அதிகாரிகள், ரஸ்க் தயாரிக்கும் நிறுவனங்கள், இரும்பு பட்டறை கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளனரா என்று ஆய்வு செய்தனர்.

இந்த சோதனையில் 16 வயது மட்டும் பூர்த்தியடைந்த பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை அவர்கள் மீட்டனர், மேலும் இதுபோன்று குழந்தைகளை பணியில் வைத்திருந்த தொழிற்சாலை மற்றும் கம்பெனி பணியாளர்களுக்கு நோட்டீஸ் விடப்பட்டது. இது முதல்முறை என்பதால் எச்சரிக்கை விடுத்து அபராதம் விதிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வில் குழந்தை நலத்துறை, ச்லைடு லைன், பெண்கள் பாதுகாப்பு அலுவலர்கள், பெண் காவலர்கள் என்று நான்கு துறை அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர்.

Categories

Tech |