நாம் தமிழர் கட்சி ஜனநாயக ரீதியான தர்கங்களை அரசியலை முன்னெடுப்பற்கு நீங்கள் வாருங்கள், அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என மதிமுகவின் மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மல்லை சத்யா, எல்லோருக்கும் இரண்டு கைகள்தான். உனக்கு மட்டும் 100 கை இருப்பதை போல, நாங்கள் கை இல்லாமல் இருப்பதை போல பேசுவது. இந்த பிரச்சனைக்கு உள்ளே நாங்க போக விரும்பலை. ஒரு ஜனநாயக ரீதியான தர்கங்களை அரசியலை முன்னெடுப்பற்கு நீங்கள் வாருங்கள், அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
வன்முறை என்பது இருபக்கமும் கூர்மையான ஆயுதம். சர்வாதிகாரம் என்பது தனிமனித கோளாறு மட்டுமல்ல, அடங்கிப் போவதையே வாழ்க்கையாக கொண்டிருக்கின்ற ஒரு சிறு கூட்டத்துடையே நோக்கத்தின் காரணமாக தான் சர்வாதிகாரம் இந்த மண்ணில் தொடங்குகின்றது. எனவே சர்வாதிகாரத்தை கொண்டு யாரும் வென்றதாக வரலாறு இல்லை. எனவேதான் இந்த காலகட்டத்தில் இந்த சர்வாதிகார போக்கை, இந்த பாசிச மனப் பான்மையை உடைத்தேறிவதற்காக இங்கே திராவிடப் பேரியக்கத்தின் பெரியாரிய கூட்டமைப்பும் ஒன்றுசேர்ந்து இருக்கிறோம்.
இங்கே நம்முடைய தோழர்கள் சொன்னதை போன்று கருத்து மாறுபாடு இருக்கலாம் எங்களுக்குள், ஆனால் ஒற்றை நோக்கத்தில் ஒரு பொது நோக்கத்தில் அனைவரும் ஒன்று திரண்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும், தமிழ் தேசியத்தை வென்றெடுப்பதற்கு உறுதியாக நிற்க்கின்ற களத்தில் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். எனவே தொடர்ந்து உங்களுடைய வன்முறை நீளுமேயனால் தொடர்ந்து உங்களுடைய நடவடிக்கைகள் அடாவடித்தனங்கள் கூடுமேயானால் அதை கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய இடத்தில் அரசு இருக்கிறது, காவல்துறை இருக்கிறது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என அவர் தெரிவித்தார்.