கனடாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் இறப்பிற்கு உலக மக்கள் சமூக ஊடகங்களில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் பிறந்து தனது 17 வது வயதில் படிப்பிற்காக நதியா சவுத்ரி அமெரிக்கா சென்றார். அதிலும் நரம்பியல் மருத்துவரான நதியா பல ஆண்டுகளாக கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கருப்பை புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் 45 வயதான நதியா மரணமடைந்துவிட்டார் என்னும் செய்தியை கான்கார்டியா பல்கலைக்கழகம் கடந்த செவ்வாய்கிழமை அன்று உறுதி செய்தது. இவருக்கு திருமணமாகி ஒரே ஒரு மகன் உள்ளார்.
இவரின் மறைவு உலக மக்கள் தங்களது குடும்பத்தில் உள்ள ஒருவரை இழந்துவிட்டதாக பார்க்கின்றனர். மேலும் நதியாவின் மறைவிற்கு சமூக ஊடகங்களில் மக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதிலும் நதியா தான் இறப்பதற்கு முன்பாக வாழ்வின் இறுதி நாட்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையானது 1,43,000 ஆக உயர்ந்துள்ளது.
அந்த பதிவில் “தனது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள், மருத்துவமனையில் ஏற்பட்ட அனுபவங்கள், மறக்க முடியாத நினைவுகள், தனது மகனைப் பற்றிய விஷயங்கள் போன்றவற்றை வெளியிட்டுள்ளார். அதிலும் கடைசியாக செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று சமூக ஊடக உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் இறுதிச் சடங்குகள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் வரலாற்று ரீதியாக ஒதுக்கப்பட்ட நரம்பியல் அறிவியல் பிரிவை சேர்ந்த மாணவர்களை ஆதரிப்பதற்காக அவரின் பெயரில் உதவித்தொகையாக 500,000 டாலருக்கும் மேல் கொடுத்துள்ளார்.