Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் எதற்கும் துணிந்தவனுக்கு சிக்கல்…. இந்த படம் தான் காரணமா….? வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதோடு சூர்யாவிற்கு ஆந்திராவிலும் அதிக ரசிகர்கள் இருப்பதால் எதற்கும் துணிந்தவன் படத்தை ஆந்திர மாநிலத்திலும் வெளியீட படக்குழு முடிவு செய்தது.

ஆனால் ஜனவரி 7ஆம் தேதி பிரமாண்டமாக உருவாகியிருக்கும் தெலுங்கு திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் வெளியாக இருப்பதால் சூர்யாவின் படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்திற்காக தென்னிந்திய ரசிகர்களும்  மிகுந்த ஆர்வமுடன் காத்திருப்பதால் ஆர்.ஆர்.ஆர் படம் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பெரிய சிக்கலாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |