தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிபிராஜ் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பாக அருண்மொழி மாணிக்கம் இயக்கியிருக்கும் திரைப்படம் மாயோன். இசைஞானி இளையராஜா இசை அமைத்த இந்த படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் டீசர் வெளியிடுவதில் படக்குழு புதிய முயற்சியாக பார்வையற்றவர்களுக்கு என்று தனியாக பின்னணி குரலுடன் பிரத்தியேகமாக வேறொரு டீசரையும் தயார் செய்து வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.