Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாம்பார் பாத்திரத்தில் விழுந்த குழந்தை…. உடல் வெந்து பலியான சோகம்…. கதறிய பெற்றோர்…!!

சாம்பார் பாத்திரத்திற்குள் தவறி விழுந்ததால் உடல் வெந்து 1 1/2 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள தாழநல்லூர் கிராமத்தில் விவசாய மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கிரிஷ் என்ற மகனும், கிருபா ஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் வயலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மதிய உணவு தயார் செய்யுமாறு தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் தனலட்சுமி சாப்பாடு தயார் செய்த பிறகு சாம்பாரை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி சமையலறையில் வைத்துள்ளார்.

அதன் பிறகு கேஸ் அடுப்பில் தனலட்சுமி பால் காய்ச்சி கொண்டிருக்கும்போது விளையாடிக்கொண்டிருந்த கிருபா ஸ்ரீ சூடாக இருந்த சாம்பார் பாத்திரத்தை பிடித்து இழுத்துள்ளார். இதனால் எதிர்பாராவிதமாக பாத்திரத்திற்குள் தவறி விழுந்ததால் குழந்தையின் உடல் முழுவதும் வெந்து விட்டது. அதன்பின் அலறித் துடித்த தனது மகளைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தன லட்சுமி  உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |